Categories
விவசாயம்

மாடித்தோட்டம் வைக்க ஆசையா….? இந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க… 5 சிறப்பான டிப்ஸ் இதோ…!!

வீட்டில் மாடித் தோட்டம் அமைப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் நாம் ஆசைப்பட்டு வைக்கும் அனைத்து செடிகளும் நாம் செய்யும் சிறு தவறினால் செழிப்பாக வளர்வது இல்லை. 5 முக்கியமான தவறுகளை தவிர்த்தால் மாடித் தோட்டத்தில் உள்ள செடிகள் நன்றாக வளரும்.

  • முதலாவதாக நாம் செய்யும் தவறு தொட்டியில் மண்ணை நிரப்பி செடியை நட்டு வைப்பது தான். இப்படி செய்யக்கூடாது. மண்ணில் மட்கக்கூடிய பொருட்களான சமையலறை கழிவுகள், காகிதங்கள், முட்டை ஓடுகள், காய்ந்த இலை போன்றவற்றை சேர்த்து 15 நாட்கள் வரை மண்ணை மூடி வைக்க வேண்டும். அதன் பின்னர் அந்த மண்ணை தொட்டியில் நிரப்ப வேண்டும்.
  • இரண்டாவதாக நாம் செய்யும் தவறு தொட்டி முழுக்க நிறைய தண்ணீரை கூறுவதாகும். அதாவது அதிக அளவு தண்ணீரை ஊற்றினால் செடியின் வேர்ப்பகுதி அழுகிவிடும். எனவே செடிகளுக்கு தேவையான அளவு தண்ணீரை மட்டுமே ஊற்ற வேண்டும்.
  • மூன்றாவதாக பகல் நேரங்களில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும். இப்படி செய்வதால் சூரிய ஒளியின் வெப்பத்தால் செடி மிக விரைவில் கருகிவிடும். எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது மிகவும் நல்லது.
  • நான்காவதாக மாடித் தோட்டத்தை ஒழுங்காக பராமரிக்காமல் விடுவதால் செடிகளை பூஞ்சை நோய் அதிகமாக தாக்கும். எனவே வாரத்தில் ஒரு முறையாவது செடிகளை கட்டாயம் பராமரித்து வேப்பம் புண்ணாக்கு கரைசல் அல்லது இஞ்சி பூண்டு விழுதுகளை அரைத்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும்.
  • ஐந்தாவதாக செடிகளை சரியான தட்பவெட்பநிலை உள்ள இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். மாடி தோட்டத்தில் வைக்கும் செடிகளின் தட்பவெட்ப நிலையை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற சரியான இடத்தில் வைத்து பராமரித்தால் மாடி தோட்டம் நாம் எதிர்பார்க்கும் படி மிகவும் அழகாக இருக்கும்.

Categories

Tech |