பள்ளியின் முதல் மாடியிலிருந்து மாணவி கீழே குதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் பிளஸ்-1 மாணவி திடீரென மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் மாணவி தன்னிடம் ஆசிரியர் சாமிநாதன் ஆபாச வார்த்தைகளில் பேசி ஒரு மாதமாக பாலியல் தொல்லை செய்து வருவதாக கூறியுள்ளார். இதனால் மனம் உடைந்து தற்கொலை முயற்சி செய்து கொண்டேன் என காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.