மாடியிலிருந்து தவறி விழுந்த நபரை கண்ணிமைக்கும் நேரத்தில் இளைஞர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பரபரப்பான பால்கனியில் நின்றுகொண்டிருந்த வாடிக்கையாளர் பினு (38) திடீரென்று மயக்கம் அடைந்ததால் பின்னே சாய்ந்தார். இதை கண்ட அருகில் இருந்த பாபு என்ற இளைஞர் உடனடியாக அவரின் காலை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். மற்ற வாடிக்கையாளர்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டார். அவர் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.