கடையில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அணைத்து விட்டனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி டி.பி.எச் சாலையில் மர சாமான்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் பழைய கட்டில், கதவு, ஜன்னல் போன்ற மர சாமான்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மரச்சாமான்கள் வழங்கப்பட்டிருந்த அறையில் இருந்து கரும்புகை வெளியானது. சற்று நேரத்தில் மரச்சாமான்கள் முழுவதும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த திருவல்லிக்கேணி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் மரசாமான்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.