Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடியில் இருந்து குதித்து 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி…. காரணம் என்ன?…. வெளியான தகவல்….!!!!

மாமல்லபுரத்தில் வசித்து வருபவர் சுரேஷ். இவருடைய மகள் கஜசுபமித்ரா (14) மாமல்லபுரம் பூஞ்சேரியிலுள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதாந்திர தமிழ்பாட செய்முறை தேர்வு நடந்தது. அப்போது மாணவி கஜசுபமித்ரா கையில் பிட்பேப்பர் வைத்துக் கொண்டு தேர்வு எழுதியதாக தெரிகிறது. இதற்கிடையில் தேர்வில் அவர் காப்பி அடிப்பதை வகுப்பில் இருந்த ஆசிரியை கையும் களவுமாக பிடித்து, அறிவுரை கூறி கண்டித்தார். மேலும் மறுநாள் பள்ளிக்கு வரும்போது பெற்றோரை அழைத்து வரும்படி கூறினார்.

இதன் காரணமாக பதற்றமடைந்த மாணவி கஜசுபமித்ரா யாரும் எதிர்பார்க்காத அடிப்படையில் திடீரென்று பள்ளியின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார். இதனால் பலத்த காயமடைந்த மாணவியை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அத்துடன் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |