சென்னை திரு.வி.க. நகர் ஒத்தவாடை தெருவில் சந்திரசேகர்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சந்திரசேகர் செய்து வந்த தொழிலில் வருமானம் குறைவாக இருந்தது. இதனால் குடும்ப நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து கடன் பிரச்சனையில் சிக்கிய அவரது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சந்திரசேகர் நேற்று அதிகாலை வீட்டின் 3 வது தளத்தில் உள்ள மொட்டை மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த செய்த திரு.வி.க போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.