வீட்டின் மாடியில் பதுங்கி இருந்த உடும்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செண்பகராமன்புதூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டு மாடியில் உடும்பு ஒன்று பதுங்கி இருந்ததை பார்த்த சேகர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனக்காப்பாளர் சிவராமன், வேட்டை தடுப்பு காவலர் சிவா ஆகியோர் உடும்பை பத்திரமாக பிடித்தனர். இதனை எடுத்து பிடிபட்ட உடும்பு காட்டில் விடப்பட்டது.