மத்தியபிரதேச மாநில பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வில் சாக்லேட் கொடுத்தால் மாடுகள் அதிக அளவில் பால் சுரக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் உள்ள கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மாடுகளுக்கு கொடுப்பதற்காக சாக்லேட் ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த சாக்லேட்டில் பல்வகை வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் அடங்கியுள்ளன. கால்நடை தீவனம் மற்றும் கால்நடை மேய்ச்சல் ஆகியவற்றிற்கு மாறாக இந்த சாக்லேட்டை நாம் கொடுக்கும் போது கால்நடைகள் அதிக அளவில் பால் சுரப்பது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சாக்லேட் பால் உற்பத்தியை அதிகரிப்பதுடன் கால்நடைகளின் இனப்பெருக்கத்தையும் மேம்படுத்தும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாநில கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்பு துறையின் உதவியுடன் மாநிலம் முழுவதும் இந்த இந்த சாக்லேட் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.