Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாடுகள் வெளியே வந்தால் அபராதம்…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தெரு மற்றும் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது. தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும், பொது சுகாதாரத்திற்கு கேடு ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு கால்நடைகளை வளர்க்கும் நபர்கள் தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை தங்களது வளாகத்திற்குள்ளேயே கட்டிவைத்து சுகாதார முறைப்படி வளர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அவ்வாறு இல்லாமல் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை மாநகராட்சி மூலம் பிடித்து செல்வதோடு, முதன்முறையாக 10,000 ரூபாய் அபராதம் மூன்று நாட்களுக்குள் செலுத்தி கால்நடையின் உரிமையாளர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு உரிமையாளர் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் மாநகராட்சி அருகிலுள்ள கால்நடை சந்தையில் விற்பனை செய்து அந்த தொகை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |