மனவேதனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு கிராமத்தில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வசந்தி தன் வீட்டில் பாசமாக வளர்த்த பசுமாடு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த வசந்தி தனது வீட்டில் வைத்து கடந்த 11 -ஆம் தேதி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த வசந்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வசந்தி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.