Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடு காணாமல் போனதாக புகார் அளித்த தாய்-மகள்…. பக்கத்து வீட்டுக்காரரின் வெறிச்செயல்…. சென்னையில் பரபரப்பு….!!!

தாய் மற்றும் மகளை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் பெறும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டம் பூந்தமல்லி அருகே பகுதியில் இந்திராணி என்பவர் தன்னுடைய மகள் ரேணுகா என்பவருடன் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக சில மாடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு மாடு கடந்த சில நாட்களுக்கு முன்பாக காணாமல் போய் உள்ளது. இது தொடர்பாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்போது தங்கள் வீட்டின் அருகே வசிக்கும் ரமேஷ் மீது எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது எனவும் காவல்துறையினரிடம் இந்திராணி கூறியுள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ரமேஷ் மற்றும் அவருடைய மனைவி ஆகிய 2 பேரும் சேர்ந்து இந்திராணி மற்றும் ரேணுகாவை வீட்டில் இருந்து தெருவில் இழுத்து வந்து கம்பியால் கொடூரமான முறையில் அடித்துள்ளனர். இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சிறிது நேரத்திற்கு பிறகு ரமேஷை தடுத்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் அடிபட்ட இந்திராணி மற்றும் ரேணுகா ஆகிய 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |