இளைஞர் ஒருவர் பைக்கின் குறுக்கே மாடு வந்ததால் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், செம்பிறாவிளையை சேர்ந்தவர் அபிசோன். பொறியியல் பட்டதாரியான இவர் சம்பவத்தன்று மாலை தனது விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். இந்நிலையில் திருவட்டரிலிருந்து சென்றபோது, பூவன்காடு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த மாடு ஒன்று பைக்கின் குறுக்கே வந்துள்ளது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த அபிசோன் சாலையில் உள்ள புளிய மரத்தில் மோதி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதையடுத்து அவ்வழியாக வந்தவர்கள் அபிசோனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.