Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்… மர்ம நபர் செய்த காரியம்… போலீசார் வலைவீச்சு…!!

மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணை தாக்கிவிட்டு மர்மநபர் தங்க தாலியை பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் லாந்தை காலனியில் கார்த்திகைவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலிதொழிலாளியான இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் லட்சுமி அப்பகுதியில் உள்ள வயல்களில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் லட்சுமியை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 1 1/2 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

இதில் அதிர்ச்சி அடைந்த லட்சுமி உடனடியாக ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |