Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மாடு மேய்த்த போது…. கடித்து குதறி கொன்ற புலி… மேலும் ஒருவர் பலியானதால் மக்கள் அதிர்ச்சி!!

நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே உள்ள மசினகுடியில் ஆடு மேய்த்த நபர் ஒருவர் புலி தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அந்த 13 வயதான ஆட்கொல்லி புலியை கூண்டு வைத்து பிடிப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தியும், கூண்டு வைத்தும் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.. மேலும் கேரளாவிலுள்ள குழுவினரும், அனுபவமிக்க வீரர்களும் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்..

இந்த நிலையில் ஏற்கனவே 3 பேரை அடித்துக் கொன்ற புலி, நான்காவதாக ஒருவரை கடித்து குதறியுள்ளது.. கடந்த 6 தினங்களாக தேவன் எஸ்டேட் பகுதியில் பதுங்கியிருந்த புலி, மசினகுடி நோக்கி சென்ற நிலையில், மேலும் ஒருவரைக் கொன்றது. மசினகுடி பகுதியை சேர்ந்த பழங்குடியினர் ஒருவர், பெயர் தெரியவில்லை.. அவர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.. உடன் மேடு மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஆட்கள் இதனை பார்த்துள்ளனர்..

அப்போது அடர்ந்த புதர் பகுதிக்கு இழுத்துச் சென்று கை பகுதியை கடித்து துண்டாக்கி எடுத்துச் சென்றுள்ளது அந்த புலி.. இதையடுத்து அந்த நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.. மேலும் அங்கு வந்த வனத்துறையினரிடம் மக்கள் பயங்கர கோபத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.. வனத் துறையினர் மெத்தனமாக செயல்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் தரப்பில் புலியை பிடிக்கும் வரை வெளியே வரக்கூடாது என்றும், தேவையான உதவிகளை செய்வதாகவும் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Categories

Tech |