முன்விரோதம் காரணமாக இரண்டு வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் கிராமத்தில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிச்சந்திரன் என்ற ஒரு மகன் உள்ளார். மேலும் அதே பகுதியில் வசிக்கும் நாராயணன் என்பவருக்கு சாமிதுரை என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சாமிதுரைக்கும் ரவிச்சந்திரனுக்கும் இடையே சில மாதங்களாக நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து ஒரு நாள் ரவிச்சந்திரன் நிலத்தில் சாமிதுரையின் மாடு மேய்ந்து உள்ளது.
இதனால் ரவிச்சந்திரன் கோபம் அடைந்து சாமிதுரை திட்டிய போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து படுகாயம் அடைந்த இருவரும் காவல் நிலையத்தில் அவரவர் சார்பில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.