Categories
மாநில செய்திகள்

மாடு வாங்க, தொழில் தொடங்க…. குறைந்த வட்டியில் கடன்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சிறுபான்மையினர் மக்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப் படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த்  ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்பின் மூலமாக சிறுபான்மையினர் மக்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் உதவி வழங்கப் படுவதாக கூறியுள்ளார். இந்த கடனுதவி சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வை உயர்த்துவதற்காக வழங்கப்படுகிறது. இது பொது காலகடன் திட்டத்தின் கீழ் ரூபாய் 15 லட்சம் பணம் 6 முதல் 8 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது.

இதனையடுத்து பெண்களின் சுய உதவிக் குழுக்களில் ரூபாய் 15 லட்சம் பணம் 4 சதவிகித வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. இதன்பிறகு புதிய பொற்கால திட்டத்தின் கீழ் ரூபாய் 2 லட்சம் பணம் 5 சதவீத வட்டியிலும், ஆண்களுக்கான சிறு கடன் திட்டத்தில் ரூபாய் 15 லட்சம் பணம் 5 சதவீத வட்டியிலும், கறவை மாடுகளுக்கு ரூபாய் 60 ஆயிரம் பணமும் வழங்கப்படுகிறது. மேலும் பட்டதாரிகளுக்கு சுயதொழில் தொடங்க ரூபாய் 10 லட்சம் பணம் 6 முதல் 8 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது.

இதன்பிறகு சுய தொழில் தொடங்குவோருக்கு ரூபாய் 10 லட்சம் பணம் 6 முதல் 8 சதவிகித வட்டியிலும், சிறு கடன் திட்டத்தின் கீழ் ரூபாய் 50 ஆயிரம் பணம் 4 சதவீத வட்டியிலும், நீர்ப்பாசன வசதி அமைப்பதற்கு மானியத்துடன் ரூபாய் 1 லட்சம் பணம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயதிற்கு மிகாமலும்‌ ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் கீழ் இருக்க வேண்டும். இதன்பிறகு விண்ணப்பிக்க வருபவர்கள் சாதிச்சான்று, வருமானச்சான்று, கூட்டுறவு வங்கியின் சேமிப்பு அட்டை ஆகியவற்றை உடன் கொண்டுவர வேண்டும். மேலும் கடனுதவி முகாம் 23-ஆம் தேதி அகத்தீஸ்வரம் தாலுகாவிலும், 24 ஆம் தேதி தோவாளை, 25-ம் தேதி கல்குளம், 26-ம் தேதி விளவங்கோடு, 28-ம் தேதி திருவட்டார், 29-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த முகாம் காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறும்.

Categories

Tech |