Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாட்டு கொட்டகையில் வகுப்பறை….. தொடக்கப்பளின் நிலை என்ன?….. மிகுந்த வருத்தத்தில் பெற்றோர்கள்…..!!!!

விழுப்புரம் மாவட்ட திண்டிவனம் அருகில் உள்ள கன்னிகாபுரத்தில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது. தற்போது நல்லாமூர், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையாளம், கன்னிகாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் இந்த பள்ளியில் ஒரே ஒரு வகுப்பறை மட்டும் தான் உள்ளது என்பதால் 54 மாணவிகள் கல்வி கற்கும் நிலை உள்ளது. இதனால்  1 முதல் 3 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வகுப்பறையிலும், 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் பக்கத்து வீட்டில் உள்ள மாட்டு கொட்டகைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும், வீட்டின் வளாகங்களிலும் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் இல்லை. சமையல் கூடம் இல்லாததால் சுகாதாரமற்ற முறையில் திறந்த வெளியில் சமையல் செய்து தருகின்றனர்.

இதனை தவிர விளையாட்டு மைதானம், கழிப்பிடம் இப்படி எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இந்த பள்ளியில் இல்லை. இந்த நிலைமையிலும் இந்தப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் கல்வி தரத்திற்கு எந்த குறையும் இல்லை. இங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு ஆசிரியர்கள் 2 பேர் பள்ளி மேலாண்மை குழு சார்பில் 2 ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் 2 பேர் என்று மொத்த 6 ஆசிரியர்கள் முறையாக கல்வி பயிற்றுவித்து வருகின்றனர். இதனையடுத்து அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடத்தை கட்டி தர கோரி பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அந்த கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளதாகவும், பள்ளி அமைக்க அனைத்து வசதிகளும் உள்ளது. ஆனால் இதுவரை பள்ளி கல்வித்துறை சார்பிலோ அல்லது மாவட்ட நிர்வாகிகளோ எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பெரும் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும் கல்வித்தரத்தில் உயர்ந்து நிற்கும் பள்ளிக்கு கட்டிடம் வசதி இல்லாதது மிகப் பெரிய குறையாக உள்ளது.

Categories

Tech |