சேலம் மாவட்டத்தில் மாட்டுச்சந்தையில் மாடு விற்பனை மந்தமாக உள்ளதென்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள செட்டிப்பட்டி பகுதியில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று மாட்டுச்சந்தை நடைபெறும். அந்த சந்தைக்கு நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டத்திலிருந்து வியாபாரிகள் விற்பனைக்காக மாடுகளை கொண்டு வருவது மட்டுமன்றி வாங்கியும் செல்வார்கள்.
இதனையடுத்து கேரளா, கர்நாடகம், மற்றும் ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் பெருமளவில் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள். ஆனால் கொரோனா தொற்று அதிகரிப்பு மற்றும் தமிழ் வருட பிறப்பு, தெலுங்கு வருட பிறப்பு என தொடர்ந்து பண்டிகை வந்ததால் விற்பனை மந்தமாக உள்ளது என்றும் மேலும் 50 லட்சத்திற்கு விற்பனை ஆகியுள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.