Categories
தேசிய செய்திகள்

மாட்டு சாணம் குணப்படுத்தாது…. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மாட்டு சாணம் கொரோனாவை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில் உடல் முழுவதும் மாட்டு சாணத்தை பூசிக்கொள்வது போலச் வீடியோக்கள் வலம் வருகின்றன. இந்நிலையில் மாட்டு சாணம் கொரோனாவை குணப்படுத்தாது என்றும், மாறாக இதன் மூலம் வேறு வியாதிகள் வரக்கூடும் என்றும் இந்திய வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மக்கள் யாரும் இதனை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |