Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாட்டு சாண குழிக்குள் கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த தாயார்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாட்டுச்சாண குழிக்குள் தவறி விழுந்து 1 1/2 வயது குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வள்ளவிலை தேரிவிளாகம் பகுதியில் அருண் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹின்றா(34) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் ஹின்றாவின் தாயார் வீட்டில் உள்ள மாட்டு கொட்டகை அருகே குழந்தை விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென குழந்தை காணாமல் போனதை கண்டு ஹின்றா அதிர்ச்சி அடைந்தார். இதனால் குழந்தையை அங்குமிங்கும் தேடி பார்த்துள்ளார். அப்போது மாட்டு சாணம் குழிக்குள் அசைவற்ற நிலையில் குழந்தை கிடந்ததை பார்த்து ஹின்றா அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, குழிக்கும் மாட்டு சாணத்துடன் மழைநீர் கலந்துள்ளது. இதனால் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை குழிக்குள் தவறி விழுந்து அதில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |