மத்திய பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக சிவராஜ்சிங்க் சவுகான்இருந்து வருகின்றார். இந்த நிலையில் மத்திய பிரதேச அரசு தற்போது ஒரு வினோத உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் அந்த உத்தரவு வியப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், வளாகங்களை இனிமேல் கெமிக்கல் பினாயில்களுக்கு பதிலாக மாட்டு சிறுநீர் பினாயில் மூலமே சுத்தப்படுத்த வேண்டும் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற முதல் மாடுகள் நலன் சார்ந்த விசயங்களை அமுல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.