உடையார்பாளையம் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் எனும் பகுதியில் தாசில்தார் கலைவாணன் பகவதி ராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மணல் கடத்தலை தடுக்க நேற்று ரோந்து சென்றனர்.
இந்நிலையில் அறம் கோட்டையில் இருந்து மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் விசாரித்ததில், முனி அதிரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை, சாத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்த அன்பழகன், அறம் கோட்டை கிராமத்தை சேர்ந்த முத்துசாமி என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.