தமிழகத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பச்சை துண்டை தலையில் கட்டிக் கொண்டு மாட்டு வண்டி ஓட்டியபடி வீதி உலா வந்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி “நான் ஒரு விவசாயி” என்று சமீபகாலமாக சொல்லிக் கொண்டு வருகிறார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவ்வாறு தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது நான் ஒரு விவசாயி என்ற வார்த்தையை அவர் அடிக்கடி பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் நானும் விவசாயி தான் என்று முழங்கியுள்ளார். தேனி பாலார் பட்டியில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் பன்னீர்செல்வம் பச்சை துண்டை தலையில் கட்டிக்கொண்டு மாட்டுவண்டி ஓட்டியபடி வீதியில் உலா வந்தார். ரவீந்திரநாத் மாட்டு வண்டியின் பின்னாடி நின்று கொண்டு பன்னீர் செல்வத்திற்கு பாதுகாவலராக செயல்பட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.