புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது மாட்டு வண்டியில் மணல் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரிடம் விசாரணை செய்த போது அவர் ஜான் என்பதும் கோரையாற்றிலிருந்து மணல் அள்ளி வந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் அவரை கைது செய்து மணலுடன் மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.