Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாடு வாங்குறதுக்குத்தான் வச்சிருந்த…. அதுக்குள்ள இப்படி பண்ணிட்டாங்களே… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை..!!

மாசிநாயக்கன்பட்டியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 1 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள  மாசிநாயக்கன்பட்டியில் இருக்கும் சோதனைச்சாவடியில் நேற்று கண்காணிப்பு குழு அலுவலர் கமல கண்ணன் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் 1 லட்சத்து 51 ஆயிரம் பணம் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து  மினி லாரியில் வந்தவரிடம் விசாரித்த போது அந்த மாடு வாங்க வைத்திருப்பதாக  கூறியுள்ளார். ஆனால் உரிய அவணம் இல்லாமல் எடுத்து சென்றதால் பறக்கும் படையினர், அந்த பணத்தை பறிமுதல் செய்து  தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம்  ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |