அம்பத்தூர் அருகே +2 முடித்துவிட்டு கல்லூரி செல்வதற்காக காத்திருந்த 17 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.அதன் பிறகு மாணவன் பயன்படுத்தி வந்த செல்போனை ஆய்வு செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது.
அதாவது பள்ளி மாணவன் அம்பத்தூரில் உள்ள சர் ராமசாமி முதலியார் மேல்நிலை பள்ளியில் படித்து வந்த போது அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த ஷர்மிளா என்ற ஆசிரியை நடத்தி வந்த டியூசனில் கடந்த மூன்று வருடங்களாக படித்து வந்துள்ளார்.அப்போது மாணவனுக்கும் ஆசிரியர் ஷர்மிளாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது.
பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.இதனிடையே ஷர்மிளாவுக்கு வீட்டில் மற்றொரு நபருடன் திருமணம் ஏற்பாடு நடந்துள்ளது.அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததால் பள்ளி மாணவன் உடனான தொடர்பை முழுவதுமாக துண்டித்து விட்டார். அதனால் மன வேதனை அடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.இதனைத் தொடர்ந்து ஆசிரியை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.