Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவன் தூக்கிலும், மாணவி ஆற்றிலும்… பதைபதைக்க வைக்கும் சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகள் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 20ஆம் தேதி மாலை 7 மணியளவில் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தினால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன மாணவியை தேடிவந்தனர். இதற்கிடையே நேற்று கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடி பகுதியில் கோமுகி ஆற்றின் கரையோரமாக இளம்பெண் சடலமும், அதற்கு அருகில் வேப்ப மரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய படியும் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 2 பேரின் உடல்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது சடலமாக ஆற்றில் மிதந்த மாணவி காணாமல் போன மாணவி என்பதும், வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய மாணவன் குதிரைசந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் இருவரும் ஒரே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருவதாகவும், இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்ற குழப்பத்தில் இந்த முடிவு எடுத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த மாணவன் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது நண்பரிடம் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு உண்மை காரணம் தெரியவரும் என்று கூறப்படுகின்றது.

Categories

Tech |