நடப்பு கல்வி ஆண்டிற்கான பத்து மற்றும் பதினோராம் வகுப்புக்கான பொது தேர்வு மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. அதற்காக மாணவர்களுடைய பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி அரசின் எமிஸ் செயலி வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த தளத்தில் தங்களுடைய மாணவ, மாணவிகளின் விவரங்களை சரி பார்த்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து, விவரங்களை இணையதளத்தில் சமர்ப்பிக்க தலைமை ஆசிரியர்களுக்கு டிச.,12 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், தலைமை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய டிச.,23 வரை தேர்வுத்துறை அவகசாம் அளித்துள்ளது. பணியை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.