பள்ளிகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் முயற்சி எடுத்து வருவதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் பள்ளிகல்வித்துறை மற்றும் பள்ளி பாதுகாப்பு இயக்கம் சார்பில் இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு 1,000 புத்தகங்களை வழங்கி சிறிய நூலகம் போன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து தமிழக முழுவதிலும் இதேபோன்று 1 லட்சத்து 80 ஆயிரம் இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மேலும் சமீப காலமாக பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் ஆசிரியர்களை தாக்க முயற்சி செய்வது, கொலை மிரட்டல் விடுவது மற்றும் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதனை தடுக்க பள்ளிகல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிப்பது போன்ற முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.