தமிழகத்தில் 8ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான தேசிய வருவாய் வழி தேர்வுக்கு கட்டணத்தை செலுத்தாவிட்டால், ஹால் டிக்கெட் கிடைக்காது என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அரசு தேர்வுத் துறை இணை இயக்குனர் பொன்குமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “தேசிய வருவாய்வழி, திறன் தேர்வான என்.எம்.எம்.எஸ். ஆகிய தேர்விற்கு பள்ளிகளிலிருந்து விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த விவரங்களை தேர்வுத் துறை உதவி இயக்குனர்கள் இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளவேண்டும். இதனிடையில் தேர்வு கட்டணம் செலுத்தாதோர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியாது. ஆகவே பள்ளிகள் சார்பாக கட்டணம் செலுத்துவதை உறுதி செய்து, அதன் விபரத்தை தேர்வுத் துறை இணையதளத்தில் உதவி இயக்குனர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது..