Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஆகஸ்ட் 30 கடைசி தேதி… தவறினால் அபராதம் – அண்ணா பல்கலை., எச்சரிக்கை..!!

செமஸ்டர் தேர்வுகளுக்கு பணம் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் கல்லூரிகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.. கொரோனா தாக்கம் இன்னும் குறையாத காரணத்தால் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களை தவிர்த்து, கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது..

இந்த நிலையில் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.. அதில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுமே செமஸ்டர் கட்டணத்தை கட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.. நடத்தாத தேர்வுக்கு கட்டணம் வசூலிப்பதா? என்று பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்..

இந்நிலையில் தான் செமஸ்டர் தேர்வுகளுக்கு பணம் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் கல்லூரிகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. மேலும் தேர்வு கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 30ஆம் தேதி கடைசி நாள் என்றும், அவ்வாறு செலுத்த தவறுபவர்கள் அபராத தொகையுடன் செப்டம்பர் 5க்குள் கட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |