Categories
மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு இந்த நிலையை கொடுக்காதீர்கள்”…. உயர்கல்வி செயலாளருக்கு வெங்கடேசன் கடிதம்…!!!!!!

மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்விற்கு மதுரை மாணவர்கள் லட்சத்தீவில் தேர்வு மையம் கொடுக்கப்பட்டது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உயர்கல்வி செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30ஆம் தேதி 2022 அன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருப்பது ஒரு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரில். அதற்கு விண்ணப்பித்த மாணவர் ஒருவருக்கு தேர்வு மையத்திற்கான அனுமதி சீட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வந்திருக்கிறது. இந்த நிலையில் அவர் அதை பிரித்துப் பார்த்தபோது அவர் தந்தைக்கு அதிர்ச்சி. தேர்வு மையம் லட்சத்தீவில் மாணவர் எப்படி தேர்வு எழுத போவார் கப்பலில் அல்லது விமானத்தில் இப்படி ஒரு வாரம் கூட அவகாசம் தராமல் பயணத்திற்கு டிக்கெட் வாங்குவது என்றால் எவ்வளவு செலவு.

மேலும் விமானத்திற்கு நாளுக்கு நாள் கட்டணம் இதில் அனுமதி சீட்டோடு வந்திருக்கின்ற அறிவுரை சீட்டில் ஒரு நாள் முன்பாகவே வந்து மையத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என ஆலோசனை வேறு கூறப்பட்டிருக்கிறது. மாணவரின் தந்தை பதறிப் போய் வந்தார். இவரை போல எத்தனை மாணவர்கள் பெற்றோர்களோ ஏழை நடுத்தர குடும்பங்கள் என்ன செய்யும் மன உளைச்சல் பணத்திற்கு அலைச்சல் ஏற்படும் மேலும் உயர்கல்வி செயலாளருக்கு கடிதம் எழுதி இருக்கின்றேன். இந்த நிலையில் இது போன்ற மாணவர்களுக்கு மையத்தை மாற்றுங்கள். தேர்ச்சி பெறுவதை விட தேர்வு மையத்திற்கு சென்று சேர்வது தான் கடினம் என்ற நிலையில் உருவாக்காதீர்கள் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |