நாடு முழுவதும் கொரோனாவிற்கு மருந்து கண்டு பிடிக்காத நேரத்தில் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகள் பயன்படுத்தப்பட்டன. அதனால் பல இடங்களில் சித்த மருத்துவ முறைகள் மக்களிடம் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளது.
ஆன்லைனில் சான்றிதழ் படிப்புகளாக இவை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன . தேசிய சித்தமருத்துவ நிறுவனத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஓரிரு நாட்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது .சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட படிப்புகளையும் ஆன்லைனில் பயிற்றுவிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதனால் மாணவர்கள் சித்தா மற்றும் ஆயுர்வேத படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகத்திலேயே படிக்கும் ஒரு வாய்ப்பு உருவாகி உள்ளது.