அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு இறுதியாக மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுகின்றது இதை பயன்படுத்தி அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில் 1990 முதல் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் படித்து, அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும், பிற பொறியியல் கல்லூரிகள், தொலைதூரக் கல்வியில் 2021,2002 இல் பயின்ற மாணவர்களுக்கும் இறுதியாக மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதைப் பயன்படுத்திக்கொண்டு அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவித்துள்ளது.