Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இலவச சீருடை கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

இலவச சீருடை பெற்ற பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு நான்கு ஜோடி இலவச சீருடை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு முறையாக இலவச சீருடையை அணிந்து வருவதில்லை என்று தெரியவந்துள்ளது. எனவே அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள் இலவச சீருடையை கட்டாயம் அணிந்து வர வேண்டும். இதனை தலைமையாசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |