இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமான பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் மத்திய அரசு சில கட்டுப்பாடு நடவடிக்கைகளுடன் பள்ளிகளை இயக்க அனுமதி வழங்கி உள்ளது. இதனால் நாடும் முழுவதும் நடப்பாண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் மாணவ மாணவிகள் இடைவெளி விட்டு உட்கார வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாதால் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து காணப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு பணத்திற்கு பதிலாக இலவச சீருடை வழங்க உள்ளதாக புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். அதாவது புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு புத்தகங்கள் அச்சிட அரசு அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த முறை பள்ளி மாணவர்களுக்கு சீருடை பதிலாக பணம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை சீருடையாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் சுதானா அண்ணா நகரில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மோட்டார்கள், ஜெனரேட்டர் மின்மாற்றி மற்றும் சுற்றுச்சுவர் ஆகிய பணிகளை உள்ளடக்கிய குடிநீர் திட்டம் ரூ.13 கோடி 25 லட்சத்துக்கு மதிப்பீடு செய்யப்பட்டு முடியும் நிலையில் உள்ளதாகவும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசாங்கத்துக்கு சொந்தமான காலியிடம் கண்டறியப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் அங்கு நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.