கொரோனா ஊரடங்கால் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, பொருளாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. ஊரடங்கு காலத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகள் இணைய வழிக் கல்வியை ஊக்குவித்து வருகின்றனர். ஸ்மார்ட் போன், ஆண்ட்ராய்டு போன் மூலமாக வகுப்புகளை நடத்தி வருகின்றன.
கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பில்லாமல் திணறும் பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுக்கு புதிய போன் வாங்கிக்கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது ஒரு மகிழ்ச்சிகரமான ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கொரோனாவால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் வகையில் சியோமி நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி MI – பார் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் ரூபாய் 2 கோடி மதிப்பிலான 2500 ஸ்மார்ட் போன்களை இலவசமாக வழங்க உள்ளது. இது அவர்களின் ஆன்லைன் கல்விக்காக பெரிதும் உதவும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.