மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதாரத்தைச் சீரமைக்க ரூ.80ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு. 2025-26இல் நாட்டின் நிதிப்பற்றாக்குறையை 4.5%ஆக குறைக்க இலக்கு. படித்து முடித்த பிறகு மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க ரூ.3000 கோடி ஒதுக்கீடு. பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.
செவிலியர்கள் நலனுக்காக தனி ஆணையம் அமைக்கப்படும். வரும் டிசம்பரில் ஆளில்லா விண்கலத்தை இந்தியா செலுத்தும். டிஜிட்டல் வடிவத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். ரூ. 3799 கோடி டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஒதுக்கீடு. நாட்டின் நிதிப்பற்றாக்குறை 9.5 %ஆக இருக்கும் நாடுமுழுவதும் உள்ள பட்டியலின மாணவர்களுக்கு ரூ.30,000 கோடிக்கும் மேல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
இ-நாம் மண்டி திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள 1,000 பண்ட சாலைகள் இணைக்கப்படும். கூடுதலாக 100 புதிய சைனிக் பள்ளிகள் கட்டப்படும். லடாக்கில் மத்தியப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். சிறு, குறு தொழில்களுக்கு ரூ.15ஆயிரம் கோடி ஒதுக்கீடு. சென்னை, கொச்சின் உள்ளிட்ட 5 மீன்பிடித்துறைமுகங்கள் மேம்படுத்தப்படும் எனவும் பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.