பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக ஆசிரியர்கள் நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து கொரோன சற்று குறைந்ததையடுத்து மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புனேவில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஊரடங்கு முடிந்து பள்ளிக்கு வந்துள்ளனர்.
அப்போது ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் வேலை செய்யும் பணியாளர்கள் சேர்ந்து நடனம் ஆடி மாணவர்களுக்கு உற்சாகம் கொடுத்து மீண்டும் பள்ளிக்கு வரவேற்றுள்ளனர். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் பரவி பெற்றோர்கள் மற்றும் நெட்டிசன்கள் இடையே வைரலாகி வருகிறது.
Today we welcomed our students of 5th & 6th stnd. at our Prabhat Road school with a heartwarming performance by teachers to the rhythm of dhol and lezim…following all norms of social distancing. We also gave them a red carpet welcome & bookmarks! @EduMinOfIndia @educationweek pic.twitter.com/xaL7mbaGVL
— Dr. Vidya Yeravdekar (@vidya_symbiosis) February 11, 2021