தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பள்ளி கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டு பள்ளிகள் மேம்படுத்தவும், மாணவர்களின் கற்றல் திறமைகளை ஊக்குவிப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை ரூ.419.5 கோடியை விடுவித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. ஆர் டி இ சட்டத்தில் மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளிகளுக்கு 15 நாட்களுக்குள் கல்வி கட்டணம் வழங்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.