தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் “தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஆனால் கொரோனா குறித்து அச்சம் இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது.
பள்ளி வகுப்புகள் நேரடி அல்லது ஆன்லைன் முறையில் நடத்தப்படும். எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம். நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கு ஆலோசனை மையம் அமைக்க நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியிலிருந்து ரூ.3.08 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.