Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு குட் நியூஸ்…. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…..!!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. இதையடுத்து கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. அவ்வாறு வகுப்புகள் தொடங்கப்பட்டாலும் உடற்கல்வி (பி.ஐ.டி.) வகுப்புகள், இறைவணக்க கூட்ட நிகழ்வுகள் நடத்த அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அனைத்து பள்ளிகளிலும் 6-9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான உடற்கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில் விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற இருக்கும் நிலையில், அந்த வகுப்பு மாணவர்களைத் தவிர்த்து 6, 7, 8, 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்தலாம். ஆகவே உடற்கல்வி வகுப்புகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டு இருப்பது போன்று, இறைவணக்க கூட்ட நிகழ்வுக்களுக்கும் விரைவில் அனுமதி வழங்கப்படும் என கல்வித்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Categories

Tech |