Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கொரோனா…. தமிழகத்தில் பள்ளி மூடல்…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து செப்டம்பர் 1 முதல் 9 – 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 8 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மூன்று நாட்களுக்கு பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |