மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வேதியியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால், இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இரு மாணவர்களுக்கும் தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து 7 நாட்கள் பல்கலைக்கழக விடுதிக்கு விடுமுறை அளித்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இரு மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்கள் இருவரும் விடுதியில் தங்கிப் பயின்று வரும் நிலையில், அங்குள்ள இதர 247 மாணவர்களுடன் தொடர்புடைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.