தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தற்போது விடப்பட்டுள்ளது.இந்த விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் வீட்டு பாடங்கள் மட்டுமே வழங்கலாம் என்றும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இருந்தாலும் சில அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை கட்டாயம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளி நிர்வாகம் மூலமாக உத்தரவிடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடக்கும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.