Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வருடத்திற்கு ரூ.12,000…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை நடப்பு ஆண்டிற்கு விண்ணப்பிக்க 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எட்டாம் வகுப்போடு பள்ளி இடைவேற்றலை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த இந்த திட்டம் மூலம் ஏழாம் வகுப்பில் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் பெற முடியும். இதற்கு விருப்பம் உள்ள மாணவர்கள் https://scholarship.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |