மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்காக தேசிய வாழ்வாதார சேவை மையம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. அதன் மூலமாக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பொது அறிவு, தன்னறிவுச் சோதனை, கணினி அடிப்படைப் பயன்பாடு, சுருக்கெழுத்துப் போன்ற திறன் பயிற்சிகள் 1000 ரூபாய் உதவித்தொகையுடன் வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 30 ஆம் தேதி வரை சென்யைில் உள்ள மையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இதனையடுத்து விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அதனுடன் கல்வித் தகுதி, மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்களை அஞ்சல் அல்லது கொரியர் மூலம் அனுப்ப வேண்டும்.