இந்தியாவில் ஏராளமான தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் இயங்கி வருகிறது. ஆனால் இந்த கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவியருக்கு தாமதமாக பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் பாதிப்பு ஏற்படுவதாகவும், அவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவியருக்கு 180 நாட்களுக்குள் அதாவது 6 மாதங்களுக்குள் பட்டம் வழங்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பட்டம் வழங்குவதில் காலதாமதம் செய்யும் பல்கலைக்கழகங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.