Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செலவின தொகையை உயர்த்தி தர அரசாணை…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. மக்களின் குறைகளை முன்னதாகவே கண்டறிந்து அதனை முதல்வர் பூர்த்தி செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் மாதாந்திர தவணைத் தொகையை உயர்த்தித் தர தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சோப்,சலவைத்தூள் போன்ற செலவினங்களுக்கான தொகையை உயர்த்தி வழங்குமாறு அதில் தெரிவித்துள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு 50 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 75 ரூபாயிலிருந்து 150 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |