தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கு நவம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாட்டில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது அவ்வகையில் அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன் இலவச கல்வி வழங்கப்படுகிறது.
அந்த வகையில் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் முதுநிலை கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெற நேஷனல் ஸ்காலர்ஷிப் என்ற திட்டத்தில் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பித்தவர்களில் தகுதியுடைய மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலம் உதவித்தொகை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.அதனால் கல்வி உதவித்தொகை பெற உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி நிறுவனம் கணக்கு வைத்துள்ள வங்கியில் படிவத்தை விண்ணப்பித்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது